Wednesday, May 21, 2025

இனி இதுக்கு மட்டும் தான் ‘Fine’! சாலை விதியில் அதிரடி மாற்றம் !

இந்தியாவின் பெரும்பாலான நகரங்களில் போக்குவரத்து நெரிசலும், விதிமீறல்களால் ஏற்படும் விபத்துகளும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. இந்த சூழ்நிலையில், தமிழ்நாட்டில், குறிப்பாக சென்னையில், போக்குவரத்து காவல்துறையின் நடவடிக்கைகள் குறித்து பொதுமக்கள் மத்தியில் மிகுந்த எதிர்ப்பு எழுந்துள்ளது.

“அவசரமாக இருந்தாலும் பாதியில் நிறுத்தி அபராதம் போடுறாங்க!” என்ற புகார்கள் வழக்கமானதாயிற்று. இவ்விதமான புகார்கள் அதிகரித்ததையடுத்து, சென்னை காவல் ஆணையர் அருண் புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளார். இனிமேல், தேவையில்லாமல் காவல்துறையினர் குழுக்களாக நின்று கொண்டு யாருக்காக வேண்டுமானாலும் அபராதம் விதிக்க முடியாது.

இனி முதல்,  ஐந்து விதிமீறல்களுக்கு மட்டும் தான் அபராதம் விதிக்கப்படும்:

1. அதிகவேகமாக வாகனம் ஓட்டுதல்

2. ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்தல்

3. ஒன்வேயில் செல்லுதல்

4. குடிபோதையில் வாகனம் ஓட்டுதல்

5. இருசக்கர வாகனத்தில் இருவருக்கும் மேற்பட்டோர் பயணித்தல்

இது போன்றத் தவறுகளைத் தவிர, வேறு எந்த விதிமீறலுக்கும் அபராதம் விதிக்கக்கூடாது என்பது இந்த உத்தரவின் முக்கிய நோக்கம். இது காவல்துறையினர் அதிகாரத்தை பொதுமக்கள் மீது திணிக்கும் சூழ்நிலைகளை தடுக்கும்.

இந்த நடவடிக்கை, ஒரு புறம் காவல்துறையின் கட்டுப்பாட்டைத் துல்லியமாக்கும்; மறுபுறம், பொதுமக்களுக்கு நிம்மதியையும், நியாயத்தையும் உறுதி செய்யும். மேலும், போக்குவரத்து நெரிசலை குறைக்கும் ஒரு நல்ல முயற்சியாகவும் இது பார்க்கப்படுகிறது.

Latest news