Paytm தற்போது அதன் பயனர்களுக்கு ஒரு புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது, இதில் அவர்கள் தங்களுக்குப் பிடித்தபடி தனிப்பயன் UPI ID (Custom UPI ID) உருவாக்கிக்கொள்ளலாம். UPI ID உங்களை ஈர்க்கும் வகையில் இல்லை அல்லது ஞாபகத்தில் வைத்து கொள்வது சற்று சிரமம் ஆக இருக்கிறது என்றால் நீங்கள் Paytm UPI id உங்களுக்கு பிடித்த வகையில் வைக்கலாம்.
Paytm UPI ID எப்படி உருவாக்குவது?
முதலில் உங்கள் கைபேசியில் Paytm ஆப்பை திறக்கவும்.
இடது பக்கத்தில் உள்ள ப்ரோபைல் ஐகானைத் தட்டவும்.
அப்படியே UPI மற்றும் பேமெண்ட் செட்டிங்க்ஸ் பகுதியில் செல்லவும்.
“கஸ்டமைஸ் UPI ஐடியை முயற்சிக்கவும்” என்ற விருப்பத்தை தேர்வுசெய்க.
திறந்த பக்கத்தில் உங்கள் விருப்பப்படி UPI ID ஐ உள்ளிடலாம் அல்லது பட்டியலில் இருந்து தேர்வு செய்யலாம்.
பின்னர் உறுதிப்படுத்தவும். இதன் மூலம் உங்கள் UPI ID எளிதில் மாற்றப்படும்.
கஸ்டமைஸ் UPI ID பாதுகாப்பானதா?
கஸ்டமைஸ் UPI ID-கள் உங்கள் தனியுரிமையை (privacy) மற்றும் பாதுகாப்பை (security) அதிகரிக்கும். பண பரிமாற்றத்தின் போது உங்கள் போன் நம்பர் அல்லது ஈமெயில் பகிர்வதற்கு அவசியமில்லாமல், நீங்கள் விரும்பும் தனிப்பயன் ID ஐ பயன்படுத்தலாம். இது உங்கள் நம்பரை தவறாக பயன்படுத்தப்படுவதிலிருந்து பாதுகாக்கும்.