Gpay-வில் பணம் அனுப்புவதாக கூறி நூதன மோசடி

சென்னை கோயம்பேட்டில், Gpayவில் பணம் அனுப்புவதாக கூறி ஓட்டுநரிடம் நூதன
வழிப்பறியில் ஈடுபட்டவர் கைது செய்யப்பட்டார்.

மயிலாப்பூரைச் சேர்ந்தவர் ஜோஸ்வார். இவர் சென்னை கோயம்பேட்டில், கார் ஓட்டுநர் மணிகண்டன் என்பவரிடம் ஆயிரத்து ஐநூறு ரூபாய் பண உதவி கேட்டுள்ளார். பணத்தை Gpayவில் அனுப்புவதாக கூறியதை நம்பி, மணிகண்டன் பணத்தை கொடுத்தபோது, ஜோஸ்வார் பணத்துடன் ஓட்டம்பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இது குறித்த புகாரின் பேரில், ஜோஸ்வாரை கைது செய்த போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related News

Latest News