அசாம் மாநிலத்தைச் சேர்ந்த 20 வயதான கோலாப் உசைன், கேரளாவின் கோழிக்கோடு அருகே ஒரு வீடு வாடகைக்கு எடுத்து தங்கியிருந்தார். அவர் கடந்த ஜனவரி மாதம் எர்ணாகுளம் பகுதியில் உள்ள தனது சகோதரியின் வீட்டிற்கு சென்றபோது, அங்கு வீட்டு வேலைக்கு வந்த 14 வயதான சிறுமியை அழைத்து, அவளை மிரட்டி செல்போனில் ஆபாச புகைப்படங்களை எடுத்துக் கொண்டு, அவற்றை குடும்பத்தினருக்கு அனுப்பி விடுவதாக அச்சுறுத்தி பலாத்காரம் செய்தார். அதன் பின், கடந்த மாதம் 23-ந்தேதி, அவர் சிறுமியை வேறு இடத்திற்கு அழைத்து சென்று பலமுறை பலாத்காரம் செய்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து போலீசுக்கு புகார் அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில், போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து, கொலாப் உசைனை கைது செய்தனர். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமியை மருத்துவ பரிசோதனைக்காக கோழிக்கோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.