Wednesday, March 12, 2025

அசாமில் வாங்கிய 21 கிலோ கஞ்சாவை சென்னையில் விற்ற வடமாநில இளைஞர் கைது

கூடுவாஞ்சேரி ரயில் நிலையம் அருகே, 21 கிலோ கஞ்சா வைத்திருந்த வடமாநில இளைஞர் கைது செய்யப்பட்டார். செங்கல்பட்டு மாவட்டம், கூடுவாஞ்சேரி ரயில் நிலையம் அருகே போலீசார் சோதனை செய்தபோது, அங்கு சந்தேகத்திற்கிடமான முறையில் நின்ற இளைஞரை பிடித்து விசாரணை நடத்தினர்.

அந்த இளைஞர் திரிபுரா மாநிலத்தை சேர்ந்தவர் என்பதும், அவர் கஞ்சா வைத்திருந்ததும் தெரிய வந்தது. அவர் அசாம் பகுதியில் இருந்து கஞ்சா வாங்கி வந்து, இங்கு விற்பனை செய்து வந்ததும் தெரிய வந்தது. அவரிடம் இருந்த 21 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், அந்த இளைஞரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Latest news