Sunday, December 28, 2025

தொடங்கியது வடகிழக்கு பருவமழை., மின்சாரம் துண்டிக்கப்படுமா? – அரசு விளக்கம்

வடகிழக்கு பருவமழை தொடங்கியதையொட்டி பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து மின்சார வாரிய தலைவர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் கூறியதாவது : போதிய தளவாடங்கள் இருப்பு வைத்திருப்பதுடன், மின்தடை தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் பாதுகாப்புடன் கூடிய விரைவான மின்சார வினியோகம் மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

பணியாளர்கள் மற்றும் அலுவலர்கள் சுழற்சி முறையில் பணி செய்யவும், மாநில அளவில் மின்சார தளவாடப்பொருட்கள் உடனுக்குடன் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு விரைந்து எடுத்து செல்ல பணியாளர் குழுக்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

கனமழை மற்றும் காற்றின் வேகம் காரணமாக மரங்கள் மின்சார கம்பங்களின் மீது விழுந்து சேதமடையும்போது, உடனடியாக, சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளுடன் ஒருங்கிணைந்து மிகுந்த கவனத்துடனும், உரிய பாதுகாப்புடனும் செயல்பட்டு தடையில்லா மின்சாரம் வழங்கப்படும்.

பொதுமக்கள் மின்தடை புகார்களை மின்னகத்தினை “94987 94987” என்ற எண்ணில் தெரிவிக்கலாம்.

Related News

Latest News