Friday, March 14, 2025

முடிவுக்கு வந்தது வடகிழக்கு பருவ மழை – வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

தமிழகத்தில் கடந்த ஆண்டு அக்டோபர் 15ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது. ஜனவரி முதல் டிசம்பர் இறுதி வரையிலான காலகட்டத்தில், 117 செ.மீ., மழை பெய்தது. இது, 2023ம் ஆண்டைவிட, 15 சதவீதம் அதிகமாகும்.

வழக்கமாக அக்டோபர் 3வது வாரம் முதல் டிசம்பர் மாதம் இறுதி வரை வடகிழக்குப் பருவமழை நீடிக்கும். ஆனால் இந்த முறை ஜனவரி மாதம் வரை வடகிழக்கு பருவமழை நீடித்து வந்தது.

இந்நிலையில், வடகிழக்குப் பருவமழை தமிழகம், புதுச்சேரி கேரளா, கடலோர ஆந்திரா போன்ற பகுதிகளில் இருந்து இன்றுடன் விலகியதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Latest news