அசைவம் சாப்பிடாதவங்க கட்டாயம் இதை சாப்பிடனும்! எட்டு அற்புதமான பயன்கள்..!

170
Advertisement

மாவுச்சத்து, புரதச்சத்து, விட்டமின், மினரல்கள் மற்றும் உடலுக்கு தேவையான நுண்சத்துக்கள் அடங்கிய உணவை சாப்பிட வேண்டியது அவசியம்.

ஆனால், அசைவம் சாப்பிடாதவர்களுக்கு புரதம் மற்றும் சில அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் குறைபாடு ஏற்பட வாய்ப்பு உள்ளது. அதை சரி செய்ய சாப்பிடக்கூடிய உணவுகளில் பன்னீர் முன்னிலை வகிக்கிறது.

ஒன்பது வகையான அமினோ அமிலங்களை கொண்டுள்ள பன்னீர், உடலுக்கு தேவையான புரதச்சத்தையும் வழங்குகிறது. பதப்படுத்தப்பட்ட cheese வகைகளை விட பன்னீர் ஆரோக்கியமானது என்பதால் உடல் எடை குறைப்பவர்களும் பன்னீரை அளவோடு எடுத்துக் கொள்ளலாம். தசை வளர்ச்சியில் பங்களிக்கும் பன்னீரை விளையாட்டு வீரர்களும் உடற்பயிற்சியாளர்களும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

பன்னீரில் காணப்படும் tryptophan எனும் அமினோ அமிலம் இன்சுலின் உற்பத்தியில் உதவுவதால், சக்கரை நோயாளிகளும் பன்னீரை மருத்துவ ஆலோசனையுடன் அளவாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

பாஸ்பரஸ் மற்றும் கால்சியம் அதிகம் உள்ள பன்னீர் பல் மற்றும் எலும்பு வளர்ச்சியில் பெரிதும் உதவுகிறது. சிங்க் சத்து நிறைந்துள்ள பன்னீர் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து சளி, காய்ச்சல் உள்ளிட்ட நோய்களில் இருந்து பாதுகாப்பு தருகிறது.

பன்னீரில் இருக்கும் tryptophan, மனதை அமைதிப்படுத்தக் கூடிய செரோடோனின் ஹார்மோனின் உற்பத்தியில் உதவுவதால் மன அழுத்தத்தையும் குறைக்க பன்னீர் உதவுகிறது. சுவையோடு ஆரோக்கியத்தையம் அள்ளித்தரும் பன்னீரை, அளவோடு சரியான முறையில் சாப்பிடுவது சிறப்பான பலன்களை தரும் என்பதே உணவியல் நிபுணர்களின் கருத்து.