2025ம் ஆண்டு நோபல் பரிசுக்கான அறிவிப்புகள் வெளியானது. கடந்த அக்டோபர் 6 தேதி முதலில் மருத்துவத்துறைக்கான நோபல் பரிசு 3 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, நேற்று அக்டோபர் 7ம் தேதி, 2025ம் ஆண்டுக்கான இயற்பியலுக்கான நோபல் பரிசு 3 பேருக்கு அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று அக்டோபர் 6ம் தேதி வேதியியல் நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, இன்று 2025 – ஆண்டின் இலக்கியத்திற்கான நோபல் பரிசு ஸ்டாக்ஹோமில் அறிவிக்கப்பட்டுள்ளது. ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த எழுத்தாளர் லாஸ்லோ கிராஸ்னாஹோர்கைக்கு இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது
அதாவது, அழிவை நோக்கிய உலகின் அபோகாலிப்டிக் பயங்கரத்தின் மத்தியில், கலையின் சக்தியை உறுதிப்படுத்தும் அவரது தொலைநோக்குப் பார்வை கொண்ட பணிக்காக இந்த பரிசு வழங்கப்படுவதாக நோபல் கமிட்டி தெரிவித்துள்ளது.