இசையமைப்பாளர் அனிருத், நாளை(ஆக., 23) சென்னை அருகே கூவத்தூரில் ‘ஹுக்கும்’ என்ற பெயரில் இசை நிகழ்ச்சி ஒன்றை நடத்த உள்ளார். இந்த இசை நிகழ்ச்சியை எதிர்த்து சென்னை, உயர்நீதிமன்றத்தில் செய்யூர் தொகுதி எம்எல்ஏ., பனையூர் பாபு வழக்கு ஒன்றைத் தொடர்ந்துள்ளார்.
செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அனுமதி பெறாமல் இந்த இசை நிகழ்ச்சி நடத்துவதாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும், விழா நடக்கும் இடத்திற்குச் செல்ல குறுகலான 30 அடி கிராமப்புற சாலை மட்டுமே உள்ளது. அதனால், போக்குவரத்து நெரிசல் ஏற்படவும் வாய்ப்புள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் நாளைய இசை நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கியுள்ளது. எந்தவொரு அசம்பாவிதமும் நடக்காத வண்ணம் காவல்துறை கவனிக்க வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளனர். மேலும் வழக்கை ஆகஸ்ட் 28க்கு தள்ளி வைத்தனர்.