மேற்குவங்கத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் தனித்து போட்டியிடும் என்று, கட்சித் தலைவரும், மாநில முதலமைச்சருமான மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக MLA-க்கள் கூட்டத்தில் பேசிய அவர், டெல்லி மற்றும் ஹரியானா சட்டமன்ற தேர்தல்களில், காங்கிரசும், ஆம் ஆத்மியும் ஒருவருக்கொருவர் உதவி செய்யாததே தோல்விக்கு காரணம் என்று தெரிவித்தார். எனவே, தேர்தலில் பா.ஜ.க எதிர்ப்பு வாக்குகள் பிரியாமல் இருக்க, ஒத்த எண்ணம் கொண்ட கட்சிகளுக்கு இடையே, புரிதல் இருக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
தொடர்ந்து பேசிய அவர், 2026 மேற்குவங்க சட்டமன்ற தேர்தலில், காங்கிரசுடன் கூட்டணி இல்லை என்றும், திரிணாமுல் காங்கிரஸ் 4வது முறையாக தனித்து ஆட்சியமைக்கும் என்றும் மம்தா பானர்ஜி நம்பிக்கை தெரிவித்தார்.