தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கருங்குளம் கிராம ஊராட்சிக்கு உட்பட்டது கிளாக்குளம். இங்கு கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு தான் புதிதாக சாலை அமைக்கப்பட்டது. இந்த சாலைகள் அமைக்கும் போது பணிகள் சரியில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டினர். ஆனால் அதை பொருட்படுத்தாமல் சாலை பணிகள் முடிக்கப்பட்டது.
புதிதாக சாலை போடப்பட்டு ஒரு மாத காலம் ஆவதற்குள் சாலைகள் சேதமடைந்து காணப்படுகிறது. சிறிய அளவிலான வாகனம் சென்றால் கூட சாலையில் விரிசல் ஏற்பட்டு வருகிறது. இதனால் பல இடங்களில் சாலைகள் முழுவதும் சேதமடைந்து போக்குவரத்துக்கு தகுதியில்லாத நிலையில் உள்ளது.
இந்நிலையில் தற்போது ஏற்கனவே போடப்பட்ட சாலை சேதமடைந்ததன் காரணமாக அதனை சீரமைப்பதற்காக பணிகள் நடைபெற்று வருகிறது.