Wednesday, April 16, 2025

‘EPFO’-க்கு வந்த புது அப்டேட்! அலைய வேண்டாம்…ரொம்ப ‘easy’ தான் ! இதை ‘First’ செய்யுங்க!

EPFO-க்கு இப்போ ஒரு சூப்பர் புதுப்பிப்பு வந்திருக்கு… உங்களுக்கே தெரிஞ்சிருக்கும், EPFO – அதாவது ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு – எல்லா தொழிலாளர்களுக்கும் ஒரு UAN எண் ஒதுக்கி பணியாளர் பங்களிப்பு விபரங்களை ஒரே இடத்தில் கண்காணிக்க உதவுது.

இப்போ இதுல சில முக்கியமான புதிய மாற்றங்கள் வந்திருக்கு… அது வேற எங்க தெரியுமா? நம்ம UMANG App-ல தான்! இனி உங்கள் UAN எண்னை உருவாக்குறதும், அதைக் செயல்படுத்துறதும் ரொம்ப ரொம்ப சுலபம் பாஸ்!

ஏற்கனவே பலருக்கு இது ஒரு பெரிய சிக்கலா இருந்தது – ஆனா இப்போ UMANG App-ல மூணு புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டிருக்கு. இதுல முக்கியமானது – ஆதார் முக அங்கீகாரம் (Face Authentication Technology). இதனால், உங்கள் முகத்தைக் கொண்டு நேரடியா உங்களை அடையாளம் காணலாம்.

இது எப்படி வேலை செய்கிறது? சும்மா கேட்டதுக்கு மாதிரி இல்ல – நம்ம வேலை ரொம்ப ஈஸியா ஆயிருக்கு.

இப்போ நம்ம ஒருவருக்கே UAN எண் இல்லன்னு நினைச்சுக்கோங்க. உமாங் செயலி-ல போய் “UAN ஒதுக்கீடு மற்றும் செயல்படுத்தல்” என்பதைத் தேர்ந்தெடுக்கணும். அதுக்கப்புறம் உங்கள் ஆதார் எண், மொபைல் எண் எல்லாம் கொடுக்கணும். அப்ப “OTP அனுப்பு” புடிச்சீங்கனா, ஆதாருடன் இணைக்கப்பட்ட நம்பருக்கு OTP வரும். அதைப் போட்டு சரிபடுத்தினா உடனே ஒரு புதிய UAN எண் உருவாகும் – அது நேரா உங்கள் மொபைலுக்கு SMS-ஆ வருவும்!

இதுவும் போதாதுன்னா, முகம் மூலமாக அங்கீகாரம் செய்யும் “Face RD” App-யும் பதிவிறக்கம் பண்ண சொல்லுவாங்க. அதுவும் Install பண்ணிட்டீங்கனா, full verification process முடிஞ்சிடும்.

அதே மாதிரி, UAN ஏற்கனவே உங்களுக்குள்ளா இருந்தாலும், அதை இன்னும் activate பண்ணலயா? அதுக்கான வழியும் உமாங் App-ல இருக்கு. அதுல “UAN செயல்படுத்தல்” என்பதை தேர்ந்தெடுத்து, உங்கள் ஆதார், மொபைல், UAN எண் எல்லாம் கொடுக்கணும். OTP சரிபாட்டுக்குப் பிறகு, முக அங்கீகாரம் – அதுவும் முடிஞ்சா, UAN செயல்படுத்தப்பட்டுவிடும். அதற்கான password-உம் SMS-ல வரும்.

இது ஏற்கனவே செயல்படுத்தப்பட்ட UAN-க்கும் வேலை செய்கிறதா? என்றால் ,நிச்சயமாக ஆம்!

அதுக்காகவே “UAN முக அங்கீகாரம்” என்னும் விருப்பம் உமாங் App-ல இருக்குது. இதைத் தேர்ந்தெடுத்து, உங்கள் முகத்தை அடையாளம் காட்டி, ஆதார் விபரங்களை சரிபடுத்தினா போதும் – உங்கள் EPFO details உடனே update ஆயிடும்.

முதியோர், ஓய்வு பெற்றவர்கள் – இவர்களுக்குக் கைரேகை verification சிக்கலா இருந்துச்சுனா, இப்போ முக அங்கீகாரம் மூலம் verification செய்யலாம். அதாவது – சுத்தமா கிளையில போக வேண்டிய தேவை இல்லை!

இந்த மாதிரி நவீன updates நம்ம வாழ்க்கையை எவ்வளவு எளிமையாக்குதுனு பாருங்க! ஆனா முக்கியமான விஷயம் என்னனா – இந்த சேவைகள் எல்லாம் ஆதார் Face RD App + UMANG App இருந்தால்தான் இயங்கும். இரண்டும் உங்கள் மொபைலுக்கு Play Store-ல கிடைக்கும் – எளிதாகவே install பண்ணிக்கலாம்.

Latest news