வாரிசு முதல் பாட்டு, டீஸர் ரிலீஸ், ஆடியோ லான்ச் வரை! முழு அப்டேட்

124
Advertisement

அடுத்த வருடம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகவுள்ள விஜயின் 66வது படமான வாரிசு, ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

தமன் இசையமைக்கும் இப்படத்தின் முதல் பாடல், தீபாவளிக்கு வெளியாகும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், புது போஸ்டர் மட்டுமே வெளியானது.

இந்நிலையில், நவம்பர் 4 அல்லது 5ஆம் தேதியில் வாரிசு படத்தின் முதல் பாடல் ரிலீஸ் செய்யப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

ஆடியோ லான்ச் நிகழ்ச்சியும் டீசர் வெளியீடும் டிசம்பர் 10ஆம் தேதி நடக்க வாய்ப்புள்ளதாகவும், இதைப் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என்றும் சினிமா வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.

அடுத்த வருடம் ஜனவரி 11ஆம் தேதி, வாரிசு படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.