சென்னை மெட்ரோ ரெயில்களில் தினமும் லட்சக்கணக்கானோர் பயணம் செய்து வருகின்றனர். பயணிகளின் வசதிக்காக மெட்ரோ நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
மெட்ரோ ரெயிலில் 20 மற்றும் அதற்கு மேற்பட்ட மெட்ரோ டிக்கெட்டுகளை காகித முறையில் வாங்கினால் 10% தள்ளுபடி வழங்கப்பட்டு வந்தது. இந்த சலுகை மார்ச் 1 ஆம் தேதி (1.3.2025) முதல் திரும்பப் பெறப்படும் என்று மெட்ரோ ரெயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அதே நேரத்தில் CMRL மொபைல் ஆப் மூலம் QR முறையில் குரூப் டிக்கெட் எடுத்தால் 20% தள்ளுபடி பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.