Thursday, December 25, 2025

இன்ஸ்டாகிராமில் 18 வயதிற்குட்பட்டோருக்கு புதிய கட்டுப்பாடு

18 வயதிற்குட்பட்ட சிறார்கள் இன்ஸ்டாகிராமை அதிகளவில் பயன்படுத்தி வரும் வேளையில் அதில் அபாயகரமான மோசமான உள்ளடக்கங்களை அவர்கள் பார்ப்பதாக விமர்சங்கள் எழுந்தன. இந்நிலையில் மெட்டா நிறுவனம் புதிய நடைமுறையை அறிமுகப்படுத்தியுள்ளது.

அதாவது அபாயகரமான உள்ளடக்கங்களை இனி 18 வயதுக்குக் குறைவானவர்களால் பார்க்க முடியாது. சிறார்கள் தங்களை 18 வயதுக்கு மேற்பட்டோர் எனக் கூறினாலும் அதனை கண்டறிய அதற்கான தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும் என்று மெட்டா தெரிவித்துள்ளது.

இந்த கட்டுப்பாடுகளை விரும்பும் பெற்றோருக்கு, இன்ஸ்டாகிராமில் Limited Content என்ற வசதி கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த நடைமுறை அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் கனடா நாடுகளில் விரைவில் அறிமுகமாகிறது.

Related News

Latest News