Thursday, July 31, 2025

பென்குயின் இனத்தின் வியக்க வைக்கும் வரலாறு

கடல் பகுதியை சார்ந்த பறக்க முடியாத பறவை என சொன்னவுடன் நினைவுக்கு வரும் பறவை பென்குயினாக தான் இருக்க முடியும்.

ஆனால், உண்மையிலேயே பென்குயின் ஒரு பறவையா அல்லது கடல்வாழ் உயிரினமா என ஆராய்ச்சிகள் நடக்காமல் இல்லை.

அண்மையில், 40 விஞ்ஞானிகளை கொண்ட சர்வதேச குழு ஒன்று, தற்போது உயிர்வாழும் பலதரப்பட்ட பென்குயின்களின் மரபணுக்களை ஆராய்ந்து, அவை கடந்து வந்த பரிணாம வளர்ச்சி பாதையை பற்றிய அறிக்கையை வெளியிட்டுள்ளனர்.

பறவையாக இருந்த பென்குயின் இனம், 60 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே பறக்கும் திறனை இழந்துவிட்டதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.

உடல் அளவு, நீருக்கடியில் சிறப்பாக செயல்படும் பார்வை திறன், ஆழமாக நீந்துதல் மற்றும் உடலின் தட்பவெட்ப நிலையை சீராக வைக்கக்கூடிய தன்மை என கடல்வாழ் உயிரினத்துக்கு தேவையான அனைத்து அம்சங்களையும் பெற்றிருக்கும் பென்குயின், பருவநிலை மாற்றம் காரணமாக குளிர்ச்சியான சூழலை தேடியே, நாளடைவில் நீர் சார்ந்த பனி பிரதேசங்களில் வாழும் பரிணாம வளர்ச்சியை அடைந்துள்ளதாக ஆய்வை மேற்கொண்ட ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
Latest News