Tuesday, August 19, 2025
HTML tutorial

மரணத்தை வென்ற உயிரினம்… மலைக்க வைக்கும் அதிசயம்

உயிரியல் பூர்வமான மரணத்தை ஜெல்லி பிஷ்களால் (Jelly Fish) மேற்கொள்ள முடியும் என ஏற்கனவே பல ஆராய்ச்சிகள் உறுதிப்படுத்தியுள்ள நிலையில், National Academy of Sciencesஇல் ஸ்பெயினை சேர்ந்த விஞ்ஞானிகள் புதிய ஆய்வு அறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளனர்.

பொதுவாக, ஜெல்லி பிஷ் வளர்ந்து பருவமடைந்து பின் திரும்பவும் குழந்தை பருவத்துக்கு மாறி வளரும் தன்மை கொண்டது. ஆனால், குறிப்பிட்ட காலகட்டத்துக்கு பின் பெரும்பாலான ஜெல்லி பிஷ் வகைகள் இந்த அரிய திறனை இழந்துவிடுகின்றது. எனினும், TurriTopsis டோர்னி என்ற ஜெல்லி பிஷ் இனத்தால் தொடர்ந்து வாழ முடிகிறது.

இவ்வகை ஜெல்லி பிஷ்களுக்கு புதிய DNAக்களை உருவாக்கும் ஆற்றலும், உயிர் இயக்கத்திற்கு முக்கியமான Chromosomeகளை பாதுகாக்கும் டெலோமியர்கள் அதிகம் இருப்பதே அவை மரணிக்காமல் வாழ்வதற்கு காரணம் என கூறும் விஞ்ஞானிகள், இத்துறையில் செய்யும் ஆராய்ச்சிகள் மருத்துவ துறையிலும் பலன் அளிக்கும் என கருத்து தெரிவிக்கின்றனர். 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
HTML tutorial
Latest News