Friday, January 24, 2025

ரிசர்வ் வங்கியின் 26 வது ஆளுநராக பதவியேற்றார் சஞ்சய் மல்ஹோத்ரா

கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் ரிசர்வ் வங்கியின் ஆளுநராக இருந்த சக்திகாந்த தாஸ் பதவிக்காலம் நேற்றுடன் முடிவடைந்தது. இதையடுத்து ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநராக சஞ்சய் மல்ஹோத்ரா நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில் இன்று மத்திய ரிசர்வ் வங்கியின் 26-வது ஆளுநராக சஞ்சய் மல்ஹோத்ரா பொறுப்பேற்றுக்கொண்டார். இவருடைய பதவிக்காலம் 3 ஆண்டுகள் ஆகும்.

சஞ்சய் மல்ஹோத்ரா பொறுப்பேற்ற போது துணை நிலை ஆளுநர்கள் சுவாமிநாதன், ராஜேஸ்வர ராவ், சங்கர் ஆகியோர் உடன் இருந்தனர்.

Latest news