கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் ரிசர்வ் வங்கியின் ஆளுநராக இருந்த சக்திகாந்த தாஸ் பதவிக்காலம் நேற்றுடன் முடிவடைந்தது. இதையடுத்து ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநராக சஞ்சய் மல்ஹோத்ரா நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில் இன்று மத்திய ரிசர்வ் வங்கியின் 26-வது ஆளுநராக சஞ்சய் மல்ஹோத்ரா பொறுப்பேற்றுக்கொண்டார். இவருடைய பதவிக்காலம் 3 ஆண்டுகள் ஆகும்.
சஞ்சய் மல்ஹோத்ரா பொறுப்பேற்ற போது துணை நிலை ஆளுநர்கள் சுவாமிநாதன், ராஜேஸ்வர ராவ், சங்கர் ஆகியோர் உடன் இருந்தனர்.