புதிய ரேஷன் கார்டு (new ration card) கேட்டு விண்ணப்பித்து காத்திருப்பவர்களுக்கு தமிழ்நாடு அரசிடமிருந்து ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
50 ஆயிரம் பேருக்கும் மேல் விரைவில் புதிய ரேஷன் கார்டு விநியோகிக்கப்பட உள்ளது. எனவே, புதிதாக விண்ணப்பித்தவர்கள் என்றால், உங்களின் விண்ணப்ப நிலையை செய்து கொள்ளுங்கள்.
புதிய ரேஷன் கார்டு விண்ணப்ப நிலையை அறிய, நீங்கள் விண்ணப்பிக்கும்போது இறுதியாக ஒரு ஒப்புகைச் சீட்டு கொடுக்கப்பட்டிருக்கும். அதில் இருக்கும் விண்ணப்ப எண்ணை எடுத்து, TNPDS வெப்சைட்டில் புதிய ரேஷன் கார்டு விண்ணப்ப நிலையை அறிய என்ற ஆப்சனில் சென்று பதிவிடவும்.
இப்போது உங்களின் புதிய ரேஷன் கார்டு விண்ணப்ப நிலை திரையில் தோன்றும். நான்கு நிலைகளிலும் வெரிபிகேஷன் முடிந்திருந்தால் கார்டு பிரின்டுக்கு அனுப்பப்பட்டிருக்கும். இல்லையென்றால் எந்த நிலையில் உங்கள் விண்ணப்பம் இருக்கிறது என்பது திரையில் தோன்றும். உங்களின் விண்ணப்ப நிலையை இப்போது நீங்கள் முழுமையாக அறிந்திருப்பீர்கள்.
புதிய ரேஷன் கார்டை வாங்கியவுடன் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட நியாயவிலைக் கடைகளுக்கு சென்று கார்டை பதிவு செய்துவிட வேண்டும். அப்போது தான் உங்கள் கார்டு ஆக்டிவேஷன் ஆகும். அதன்பிறகே ரேஷன் கடைகளில் பொருட்களை வாங்க முடியும். பொங்கல் பரிசும் கிடைக்கும்.
