Monday, January 26, 2026

ரஜினியின் ‘கூலி’ படத்திற்கு வந்த புதிய சிக்கல்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் திரைப்படம் ‘கூலி’. இது ரஜினியின் 171 வது திரைப்படமாகும். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இதன் படப்பிடிப்பு சென்னை தாண்டி ஐதராபாத். ஜெய்ப்பூர், விசாகபட்டினம் உள்ளிட்ட இடங்களிலும், வெளிநாடுகளிலும் நடந்தது.

இப்படம் வருகிற ஆகஸ்ட் 14-ந் தேதி வெளியாக உள்ளதால், போட்டிக்கு வேறு எந்த பெரிய படமும் வராது என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதே தேதியில் ஹிருத்திக் ரோஷன் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர். நடிப்பில் உருவாகியுள்ள ‘வார் 2’ படம் வெளியாக உள்ளது.

இதன் காரணமாக ஆந்திரா, தெலுங்கானா மற்றும் வட மாநிலங்களில் ‘கூலி’ படத்திற்கு எதிர்பார்க்கப்பட்ட தியேட்டர்கள் ஒதுக்கீடு செய்யப்படுவதில் சிக்கல் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுதொடர்பாக திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் வினியோகஸ்தர்களிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

Related News

Latest News