Tuesday, July 29, 2025

கமலின் ‘தக் லைப்’ பட தலைப்புக்கு வந்த புதிய சிக்கல்

மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள ‘தக் லைப்’ திரைப்படம் வரும் ஜூன் 5-ந்தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தின் புரமோஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நடிகர் கமல் கன்னட மொழி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக கர்நாடகாவில் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் கமலின் ‘தக் லைப்’ படத்தின் தலைப்புக்கு புதிய தமிழக தலைவர் கிருஷ்ணசாமி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். Thug Life” எனும் பெயரில் புதிய திரைப்படம் விரைவில் வெளிவர உள்ளதாக தெரிகிறது. Thuge என்றால் பொறுக்கிகள் மூர்க்கர்கள் போக்கிரிகள் என்று வரலாற்று ஆசிரியர்களால் சித்தரிக்கப்பட்டு இருக்கிறது. எனவே தனது திரைப்படத்திற்கு ‘Thug life” எனும் பெயரைத் தவிர்க்க வேண்டும் என நடிகர் கமலை வலியுறுத்துவதாக அவர் தெரிவித்துள்ளார்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
Latest News