Thursday, September 4, 2025

ஏ.ஐ. தொழில்நுட்பத்துடன் புதிய ‘இ-ஆதார்’ ஆஃப் அறிமுகம்!

மத்திய அரசு ஆதார் சேவைகளை ஒரே இடத்தில், எளிதாக அணுக உதவும் புதிய மொபைல் செயலி ‘இ-ஆதார் ஆஃப்’ விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது. ‘இ-ஆதார்’ செயலி, தற்போது உள்ள ‘எம்-ஆதார் (mAadhaar)’ செயலி போல, ஆதார் அட்டையின் முழு டிஜிட்டல் வடிவமாக செயல்படும்.

இந்த செயலியின் மூலம், உங்கள் பெயர், முகவரி மற்றும் பிறந்த தேதி போன்ற விவரங்களை நேரடியாக மாற்றிக்கொள்ளலாம். அத்துடன், தேவையான இடங்களில் உங்கள் ஆதார் அட்டையை டிஜிட்டல் முறையில் பகிரக்கூடும்.

குறிப்பாக, இந்த செயலியின் ‘early-access’ பதிப்பு ஆண்ட்ராய்டு பயனர்களுக்காக கூகிள்பிளே ஸ்டோரில் வெளியாகி உள்ளது. இப்போதைக்கு அனைத்து அம்சங்களும் முழுமையாக செயல்படாவிட்டாலும், பயனர்கள் தங்கள் ஆதார் எண்ணை பயன்படுத்தி உள்நுழைவதன் மூலம் சில முக்கிய சேவைகளை முயற்சி செய்து பார்க்க முடியும். முழுமையான பதிப்பு இந்த ஆண்டின் இறுதிக்குள் அதிகாரப்பூர்வமாக வெளிவர உள்ளது எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இ-ஆதார் ஆஃப் செயலியின் முக்கிய அம்சங்கள்:

முகவரி, பிறந்த தேதி அல்லது தொலைபேசி எண்ணைப் பயனர்கள் தாங்களே எளிதாக மாற்றிக்கொள்ள முடியும்.

உங்கள் டிஜிட்டல் ஆதார் அட்டையை எப்போதும், எங்கும் பாதுகாப்புடன் பகிரலாம். பிறப்புச் சான்றிதழ், பான் கார்டு, பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம், ரேஷன் கார்டு, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம் மற்றும் மின்சாரக் கட்டண ரசீதுகள் போன்ற ஆவணங்களை செயலி தானாகவே பெறும் மற்றும் சரிபார்க்கும் வசதி உள்ளது.

இந்த செயலி செயற்கைத்திறனும் (AI), முக அடையாளம் கண்டறிதலும் போன்ற முன்னணி தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, ஆதார் சரிபார்ப்புகளை வேகமாகவும் துல்லியமாகவும் செய்ய உதவும். இதன் மூலம், பொதுவாக நாட்கள் எடுக்கும் அரசு சேவைகள் சில நிமிடங்களில் முடிக்கப்படலாம்.

‘இ-ஆதார் ஆஃப்’ செயலி நாளடைவிலேயே உங்கள் ஆதார் சேவைகளை மின்னணு மூலமாக எளிதாகக் கையாளும் மிக முக்கியமான ஒரு கருவியாக மாற உள்ளது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
Latest News