மக்களை Zombieயாக மாற்றத் தொடங்கிய மருந்து! 5 நிமிடத்திற்கு ஒரு மரணம்…அதிர்ச்சித் தகவல்!

214
Advertisement

சுயமாக அதிக அளவில் மருந்துகளை எடுத்துக் கொள்வதால் அமெரிக்காவில் ஐந்து நிமிடங்களுக்கு ஒரு மரணம் நிகழ்வதாக, அமெரிக்காவின் Federal அறிக்கைகள் கூறுகின்றன.

இது போதாதென தற்போது புழக்கத்திற்கு வந்திருக்கும் புதிய மருந்து, பயனர்களின் தோலை அழுக வைத்து பெரிய அதிர்ச்சியை கிளப்பியுள்ளது.

விலங்குகளுக்கு மட்டுமே பயன்படுத்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ள சைலசைன் (Xylazine) எனும் மருந்து, ஹெராயின் போன்ற போதைப் பொருட்களுடன் கலப்படம் செய்யப்படுவதாகவும், இதனால் தீவிரமான விளைவுகள் எழுந்திருப்பதாக Time பத்திரிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ட்ரான்க் டோப் (Tranq Dope) என்ற பெயரில் சில டாலர்களுக்கே கிடைக்கும் இந்த போதை மருந்து Fentanyl மற்றும் சைலசைனின் கலவையாக உள்ளது.

மயக்கம், அதிகப்படியான தூக்கம், மன அழுத்தம் மட்டுமில்லாமல் தோலில் ஏற்படும் தொற்றுகள், சதையை அழுக வைத்து Zombie போல மாற்றுவதாகவும், இது போன்ற போதை வஸ்துக்களை உபயோகிப்பதை தவிர்க்க வேண்டும் என அமெரிக்க பொது சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.