‘துணிவு’ பாடல்கள் இரன்டுமே அட்ட காப்பி டியூன் தான்! வச்சு செய்யும் நெட்டிசன்ஸ்

197
Advertisement

விஜயின் ‘வாரிசு’ மற்றும் அஜித்தின் ‘துணிவு’ படமும் ஒரே சமயத்தில் வெளியாவதை அடுத்து இருதரப்பு ரசிகர்களிடமும் எதிர்பார்ப்புகள் அதிகரித்த வண்ணம் உள்ளன.

இரு படங்களிலுமே இப்போது இரண்டு பாடல்கள் வெளியாகி, ரசிகர்கள் தங்கள் அபிமான நட்சத்திரத்தின் பாடல்களை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

ஒன்பது நாளைக்கு முன் ரிலீஸ் ஆன ‘சில்லா சில்லா’ பாடல் youtube ட்ரெண்டிங்கில் இரண்டாம் இடத்தில் இருக்க, ஒரு நாள் முன்னதாக வெளியான ‘காசேதான் கடவுளடா’ பாடல் youtube ட்ரெண்டிங்கில் முதலிடத்தை பிடித்துள்ளது.

வழக்கமாக, புதுப்பாடல் வரும் போது இந்த பாடல் எந்த பாடலை போல உள்ளது என நெட்டிசன்கள் தேடித் கண்டுபிடிப்பது தற்போதைய ட்ரெண்ட் ஆகி விட்டது.

முன்னதாக, ‘சில்லா சில்லா’ பாடல் தனுஷ் நடித்த குட்டி படத்தில் இடம்பெற்ற ‘கண்ணு ரெண்டும் ரங்கராட்டினம்’ பாடலின் காப்பி என பரவலாக பேசப்பட்ட நிலையில், தற்போது வெளியாகி உள்ள ‘காசேதான் கடவுளடா’ பாடல் ஹிப்ஹாப் ஆதி நடித்த ‘அன்பறிவு படத்தின் ‘Ready Steady Go’ பாடலை போலவே இருப்பதாக நெட்டிசன்கள் சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.