Thursday, February 19, 2026

அவ்ளோதான் நம்மள முடிச்சிவிட்டிங்க போங்க.., பெரிய ஹீரோக்களை நம்பி ஏமாந்து போன நெட்பிளிக்ஸ்

நெட்பிளிக்ஸ் பெரிய ஹீரோக்கள் படங்களை அதிக தொகையில் வாங்கி, எதிர்பார்த்த வருவாய் கிடைக்காமல் பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ளது. குறிப்பாக, அஜித் நடித்த ‘விடாமுயற்சி’, சூர்யாவின் ‘ரெட்ரோ’, மற்றும் கமல், சிம்பு நடித்த ‘தக் லைஃப்’ ஆகிய படங்கள் தியேட்டரில் பெரிய தோல்வி அடைந்ததால், ஓடிடி உரிமைக்கு செலுத்திய பணத்தை திரும்பப் பெற முடியாமல் தவித்து வருகிறது.

அஜித் நடிப்பில் வெளியான ‘விடாமுயற்சி’ திரைப்படம் துவக்கத்தில் நல்ல வசூலைப் பெற்றாலும், வாரங்கள் செல்ல செல்ல வசூல் கடுமையாக குறைந்தது. உலகளவில் ரூ.150 கோடி மட்டுமே வசூலித்தது.

சூர்யா நடித்த ரெட்ரோ படமும் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு தியேட்டரில் ஓடவில்லை. இதனால் நெட்பிளிக்ஸ் ‘தக் லைஃப்’ படத்தை நம்பி இருந்தது.

கமல் நடிப்பில் சமீபத்தில் வெளியான தக் லைஃப் படத்திற்கு நெட்பிளிக்ஸ் ரூ.130 கோடி கொடுத்து உரிமை வாங்கியிருந்தது. ஆனால், படம் தோல்வியடைந்ததால், இறுதியில் பேச்சுவார்த்தை நடத்தி ரூ.110 கோடிக்கே ஒப்பந்தம் முடிக்கப்பட்டது.

இதன் காரணமாக நெட்பிளிக்ஸ் அடுத்த படங்களை வாங்குவதற்கு தயக்கம் காட்டி வருகிறது. நெட்பிளிக்ஸின் இந்த முடிவு தயாரிப்பாளர்களை சங்கடத்தில் ஆழ்த்தி உள்ளது.

Related News

Latest News