நெல்லை -சென்னை இடையே இயக்கப்படும், நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலின் நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
இந்திய ரயில்வே சார்பில் வருகிற ஜனவரி முதல் பல்வேறு ரயில்களின் புறப்படும் நேரம் மற்றும் வந்து சேரும் நேரம் ஆகியவை மாற்றம் செய்யப்பட்டு, புதிய கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி நெல்லை -சென்னை இடையே இயக்கப்படும் நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில் நேரம் மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது. நெல்லையில் இருந்து தினமும் இரவு 8.05 மணிக்கு புறப்படும் ரயில், இனி இரவு 8.40 மணிக்கு புறப்பட்டு, எழும்பூருக்கு வழக்கம்போல் காலை 7 மணிக்கு சென்றயும். இதன் மூலம் நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயிலின் பயண நேரம் 30 நிமிடங்கள் குறைகிறது.