வாடகைக்கு லவ்வர் வேண்டுமா?

98
Advertisement

காதலர் தினத்தில் வாடகைக்கு லவ்வர் வேண்டுமா எனக் கேட்டு இளைஞர் ஒருவர் சிங்கிள்ஸைத் திரும்பிப் பார்க்க வைத்துள்ளார்.

உலகம் முழுவதும் பிப்ரவரி 14 ஆம் தேதி காதலர் தினம் கொண்டாடப்பட்டு வருவது தெரிந்ததுதான். இந்தக் காதலர் தினத்துக்கு ஆங்காங்கே எதிர்ப்புக் குரல் ஒலிப்பதும் கேட்டுக்கொண்டுதான் இருக்கிறது. அதேசமயம், காலிக்க ஆசைப்பட்டுக் காதலர் இல்லாமல் மனவேதனையில் இருப்போரும் உள்ளனர்.

அவர்களின் வேதனையைப் போக்க வாடகைக்குக் காதலர் வந்துவிட்டனர். இனிமேல், காதலர் தினத்தில் தனிமையில் இருப்பவர்கள் கவலைப்பட வேண்டியதில்லை.

Advertisement

பீகார் மாநிலம், தர்பங்கா பொறியியல் கல்லூரி ஐந்தாம் செமஸ்டர் மாணவரான பிரியன்ஷீ தான் இந்த வழியைக் கண்டுபிடித்துள்ளார்.

காதலர் தினத்துக்கு சில நாட்கள் முன்பாக பிரியன்ஷீ தனது கழுத்தில் வாடகைக்கு காதலன் என்ற பதாகையைக் கட்டித் தொங்கவிட்டுக்கொண்டு, தர்பங்கா நகரிலுள்ள ராஜ் கோட்டை, சர்ச், தர்பங்கா டவர், பிக்பஜார் உள்ளிட்ட பல பகுதிகளில் உலா வந்துள்ளார்.

இதுபற்றிக் கூறியுள்ள பிரியன்ஷீ, இன்றைய இளைஞர்கள் மன அழுத்தம், மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள். அவர்கள் அதிலிருந்து மீண்டு வரவேண்டும். தங்கள் வாழ்க்கையை நாட்டின் வளர்ச்சிக்காக அர்ப்பணிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

உலக அளவில்இந்தியாவில் இளைஞர்களின் எண்ணிக்கை அதிக எண்ணிக்கையில் இருப்பதால், அவர்களின் கவனத்தை சொந்த வாழ்க்கை வளர்ச்சிக்கும் நாட்டின் வளர்ச்சிக்கும் பயன்படுத்த வேண்டும் என அரசியல் தலைவர்கள் பலர் கூறிவரும் நிலையில், பீகார் இளைஞரின் செயல் பாராட்டையும் விமர்சனங்களையும் பெற்றுவருகிறது.

https://www.instagram.com/p/CZyVlNGP6d3/?utm_source=ig_web_copy_link