ஒரு படத்துக்கு 10 கோடி சம்பளம் வாங்கும் நயன்தாரா

456
Advertisement

நடிகர்களை தவிர்த்து தங்கள் கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதைகளில் நடிகைகள் நடிக்க தொடங்கி உள்ளனர். அந்த படங்கள் நல்ல வசூலையும் குவிக்கின்றன.

இந்தியில் முன்னணி நடிகைகள் ஒரு படத்துக்கு 10 கோடிக்கு மேல் சம்பளம் வாங்குகிறார்கள். ஆனால் தென்னிந்திய நடிகைகள் சம்பளம் குறைவாகவே இருந்துவந்தது . நயன்தாரா மட்டுமே ஒரு படத்துக்கு ரூ.5 கோடி முதல் 6 கோடி வரை கேட்பதாக கூறப்பட்டது.

தற்போதய நிலையில் நயன்தாரா சம்பளத்தை ரூ.10 கோடியாக உயர்த்தி இருப்பதாக செய்திகள் வருகின்றன . புதிய படத்துக்காக அவரை அணுகியபோது ரூ.10 கோடி கேட்டதாக கூறப்படுகிறது. நயன்தாரா இப்போது இந்தியில் ஷாருக்கான் ஜோடியாக நடித்து வருகிறார். இந்திக்கு போனதாலேயே சம்பள தொகையை உயர்த்திவிட்டார் என்கின்றனர்.