உலக நாயகன் கமல்ஹாசனின் பிறந்தநாளை முன்னிட்டு, அவரது கிளாசிக் திரைப்படமான ‘நாயகன்’ (Nayagan) மீண்டும் ரீ- ரிலீஸ் ஆகிறது. இந்நிலையில் முதல் டிக்கெட், மறைந்த நகைச்சுவை நடிகர் மற்றும் கமல்ஹாசனின் தீவிர ரசிகரான ரோபோ சங்கருக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
கமலா திரையரங்கின் உரிமையாளர் விஷ்ணு தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது : “கமலா சினிமாஸில் ரோபோ சங்கர் இல்லாமல், கமல்ஹாசன் படங்களுக்கான கொண்டாட்டங்கள் நிறைவு பெறாது. இதனால், ‘நாயகன்’ படத்திற்கான முன்பதிவு தொடங்கும் முன், முதல் டிக்கெட் ரோபோ சங்கருக்காகவும், அடுத்த சில டிக்கெட்டுகள் அவரின் குடும்பத்தினருக்காகவும் எடுத்து வைக்கப்படும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
அவருடைய இந்தப் பதிவு, சினிமா ரசிகர்களின் மனதை உருக்கியுள்ளது.
