முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் நேற்று உடல்நகுறைவால் காலமானார். அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
மன்மோகன் சிங்கின் உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. அஞ்சலிக்கு பிறகு அவரது உடல் நாளை அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்படவுள்ளது.
இந்நிலையில், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவை தொடர்ந்து தேசிய அளவில் 7 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இன்று நடைபெறவிருந்த அனைத்து நிகழ்ச்சிகளையும் மத்திய அரசு ரத்து செய்துள்ளது. த்திய அரசு அலுவலகங்களில் தேசிய கொடி அரை கம்பத்தில் பறக்கவிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.