அமெரிக்காவின் முன்னணி விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவில் (NASA) இரண்டாவது முறையாக பெரிய அளவில் ஆட்குறைப்பு மேற்கொள்ளப்படவிருக்கிறது. இதனால் சுமார் 3,900 பேர் பணி இழக்கப்போகிறார்கள் என்பது கணிக்கப்பட்டுள்ளது.
இந்த மாத தொடக்கத்தில் டிரம்ப் நிர்வாகம் குறைந்தது 2 ஆயிரத்து 145 நாசாவின் மூத்த ஊழியர்களை பணிநீக்கம் செய்ய கடிதம் அனுப்பியது. அவர்களில் பெரும்பாலானோர் சிறப்பு திறன்கள் மற்றும் நிர்வாக திறன்களை கொண்டவர்கள்.
இந்த நிலையில் மீண்டும் இரண்டாம் கட்ட ஆட்குறைப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என்ற தகவல்கள் வெளியானதால் நாசா ஊழியர்கள் கலக்கத்தில் உள்ளனர்.