நடிகை விஜயலட்சுமி தொடர்பான வழக்கில் விசாரணைக்கு ஆஜராகுமாறு சீமானுக்கு வளசரவாக்கம் போலீசார் கடந்த 24-ந்தேதி சம்மன் அனுப்பி இருந்தனர். ஆனால் அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை.
இதற்கிடையே சென்னை நீலாங்கரையில் உள்ள சீமான் வீட்டின் வெளிப்பக்க கதவில் மீண்டும் சம்மன் நோட்டீஸ் ஒட்டப்பட்டது. சம்மன் நோட்டீசை ஒட்டிவிட்டு சென்ற சிறிது நேரத்தில் அந்த சம்மனை சீமான் வீட்டு பணியாளர் ஒருவர் கிழித்தெறிந்தார். இதையடுத்து சீமான் வீட்டு காவலாளி அமல்ராஜை போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில் சீமான் வீட்டில் வைக்கப்பட்ட பெயர்ப் பலகை ஒன்று வைக்கப்பட்டுள்ளது. அதில் சம்மனை ஒட்ட விரும்பும் அதிகாரிகள் இங்கே ஒட்டிச்செல்லவும் என அதில் எழுதப்பட்டுள்ளது.