புதுச்சேரியில், அரசு உத்தரவை மீறும் வகையில் ஆங்கிலத்தில் வைக்கப்பட்டு இருந்த அரசு நிறுவனத்தின் பெயர் பலகையை தமிழ் உரிமை இயக்கத்தினர் அடித்து நொறுக்கினர்.
புதுச்சேரியில் உள்ள அனைத்து வணிக நிறுவனங்கள் கடைகளில் தமிழ் பெயர் பலகை வைக்க வேண்டும் என சட்டமன்றத்தில் முதலமைச்சர் ரங்கசாமி தீர்மானம் நிறைவேற்றினார். இதைத் தொடர்ந்து அனைத்து நிறுவனங்களும், கடைகளும் தமிழில் பெயர் பலகை வைக்க வேண்டும் என முதலமைச்சர் ரங்கசாமி வலியுறுத்தினார்.
இதுவரை தமிழில் பெயர் பலகை வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை என கண்டனம் தெரிவித்து, தமிழ் உரிமை இயக்கம் சார்பாக அனைத்து பகுதிகளிலும் துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது. அப்போது அரசு நிறுவனமான அமுதசுரபியின் பெயர் பலகை ஆங்கிலத்தில் இருப்பதை கண்டு தமிழ் உரிமை இயக்கத்தினர் அதனை உடைத்தெறிந்து தங்கள் எதிர்ப்பை தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.