இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு கடந்த ஆகஸ்ட் மாதம் தவறி விழுந்து காயமடைந்தார். இதையடுத்து அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்,. சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டதையடுத்து அவர் ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
இந்நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிசிச்சை அளித்து வருகின்றனர்.
