மயிலாடுதுறை எம்.பி. சுதாவை தாக்கி செயின் பறித்த மர்ம நபர்கள்

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 21-ந்தேதி முதல் நடைபெற்று வரும் நிலையில்,காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மயிலாடுதுறை எம்.பி. சுதா டெல்லியில் உள்ளார்.

இந்நிலையில் இன்று நாடாளுமன்ற குடியிருப்பு அருகே சுதா நடைபயிற்சியில் ஈடுபட்ட போது இரு சக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் சுதாவை தாக்கி அவர் அணிந்திருந்த 4.5 சவரன் செயினை பறித்துக்கொண்டு தப்பியோடினர். இதில் சுதாவுக்கு லேசான காயம் ஏற்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக எம்.பி சுதா போலீசிடம் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், செயின் பறிப்பில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலை வீசி தேடி வருகின்றனர்.

நாடாளுமன்ற உறுப்பினரிடமே மர்ம நபர்கள் நகை பறிப்பில் ஈடுபட்ட சம்பவம் தற்போது அப்பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Related News

Latest News