தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் தேர்தல் பிரசாரம் செய்வதற்காக தனி விமானம் மூலம் திருச்சி வந்தார். அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் வந்த நபர் ஒருவர் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் அடையாள பட்டையை அணிந்து முக்கிய பிரமுகர்கள் செல்லும் நுழைவு வாயில் அருகில் சென்றார்.
இதையடுத்து விமான நிலையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த மத்திய தொழில் பாதுகாப்பு படையினர், அந்த நபரை மடக்கி பிடித்து விசாரித்தனர். அவர் கழுத்தில் இருந்து அடையாள அட்டை இல்லாமல் வெறும் கழுத்து பட்டை மட்டும் அணிந்து விஜயை அருகில் சந்திப்பதற்காக வந்திருந்தது தெரிய வந்தது.
இதையடுத்து அந்த நபரை பாதுகாப்பு படையினர் எச்சரித்து அனுப்பினர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.