சேலத்தில் கணவன், மனைவியை கட்டி போட்டு நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில், நூற்றுக்கணக்கான சிசிடிவி கேமராக்களை போலீசார் ஆய்வு செய்துள்ளனர்.
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே காட்டுவளவு பகுதியை சேர்ந்தவர்கள் ராஜகோபால் – சரோஜா தம்பதி. இவரது வீட்டிற்குள் நுழைந்த மர்மநபர்கள், கத்திமுனையில் இருவரையும் மிரட்டி கட்டி போட்டு 22 சவரன் தங்க நகைகள் மற்றும் 80 ஆயிரம் ரூபாய் ரொக்கத்தை கொள்ளையடித்து சென்றனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற ஓமலூர் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். அங்குள்ள நூற்றுக்கணக்கான சிசிடிவி கேமராவை ஆய்வு செய்து மர்மநபர்களை பிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.