அசாம் மாநிலத்தில் உள்ள கோக்ரஜார் ரயில் நிலையம் அருகே ரயில் தண்டவாளம் மர்ம நபர்களால் வெடிகுண்டு வைத்து தகர்க்கப்பட்டுள்ளது. இந்த வழித்தடத்தில் அதிகமாக சரக்கு ரெயில் போக்குவரத்து நடைபெறுகிறது. நள்ளிரவு சுமார் 1 மணியளவில் இந்த குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது.
குண்டுவெடிப்பு சம்பவம் காரணமாக அந்த வழித்தடத்தில் செல்ல வேண்டிய 8 ரெயில்கள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டன. இந்நிலையில், குண்டுவெடிப்பை நிகழ்த்தியவர்கள் யார்? இதற்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
