பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் பதிலடி தாக்குதல் நடத்தியது. இதன் விளைவாக பாகிஸ்தான் மீதான மக்களின் கோபம் பல்வேறு வகையில் வெளிப்பட்டு வருகிறது.
இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள இனிப்புக் கடை உரிமையாளர்கள் இனிப்பு வகைகளின் பெயர்களில் உள்ள “பாக்” என்ற பெயரை நீக்க முடிவு செய்துள்ளனர். அந்த வகையில் மோதி பாக், ஆம் பாக், கோண்ட் பாக் மற்றும் மைசூர் பாக் போன்ற இனிப்புகளை மோதி ஸ்ரீ, ஆம் ஸ்ரீ, கோண்ட் ஸ்ரீ மற்றும் மைசூர் ஸ்ரீ என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதவாது, “பாக்” என்ற வார்த்தைக்கு பதிலாக “ஸ்ரீ” என்ற வார்த்தை சேர்க்கப்பட்டுள்ளது. இதனை பார்த்த நெட்டிசன்கள் இது தேவையற்றது என கருத்து தெரிவித்து வருகின்றனர்.