Wednesday, February 18, 2026

Social Media வால் எனது மகிழ்ச்சி போய்விட்டது : வைரலாகும் நடிகை ஐஸ்வர்யா லட்சுமியின் பதிவு

நடிகர் விஷால் நடிப்பில் வெளியான ‘ஆக்சன்’ படம் மூலம் அறிமுகமானவர் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி. ‘ஜெகமே தந்திரம், ‘பொன்னியின் செல்வன் 1 மற்றும் 2’, கட்டா குஷ்தி, மாமன் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமடைந்தார்.

இந்த நிலையில், நடிகை ஐஸ்வர்யா லட்சுமி, சமூக வலைதளத்தில் இருந்து விலக முடிவு செய்துள்ளார். அவர் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் வெளியிட்டுள்ள பதிவில் சமூகவலைதளம் என்னிடமிருந்த நிஜ சிந்தனையை பறித்தது. சொற்கள் மற்றும் மொழியை பாதித்தது, எளிய இன்பத்தையும் மகிழ்ச்சியற்றதாக மாற்றியது. வாழ்க்கையில் மேலும் அர்த்தமுள்ள தொடர்புகளையும் சினிமாவையும் உருவாக்குவேன் என்று நம்புகிறேன். நான் அர்த்தமுள்ள சினிமாவை உருவாக்க முடிந்தால் எனக்கு பழைய பாணியில் உங்களுடைய அன்பைக் கொடுங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Related News

Latest News