மெட்ரோ ஸ்டேஷனில் இசைப் படிக்கட்டுகள்

192
Advertisement

மெட்ரோ ஸ்டேஷனில் இசைப்படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளது பயணிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

பொதுவாக, படிக்கட்டுகளில் ஏறிஇறங்குவது சிறந்த உடற்பயிற்சி என்று மருத்துவர்களும் உடற்பயிற்சி வல்லுநர்களும் கூறிவருகின்றனர். இந்த நிலையில், மெட்ரோவில் பயணிக்க வருபவர்களின் உடலுக்கும் உள்ளத்துக்கும் நன்மை பயக்கும்விதமாக பியானா படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளது மெட்ரோ பயணிகளைப் பெரிதும் ஈர்த்துள்ளது.

கேரள மாநிலம், கொச்சி நகரின் எம்ஜி சாலையில் உள்ள மெட்ரோ ரயில் நிலையத்தில் பியானோ படிக்கட்டுகள் சமீபத்தில் அமைக்கப்பட்டுள்ளன. இந்த இசைப்படிக்கட்டுகளின்மீது நடந்துசெல்லும்போது இசையைக் கேட்டு மகிழலாம்.
பியானோ அல்லது கீபோர்டு வாசிக்கத் தெரிந்தவர்கள் தங்களின் கால் விரல்களாலேயே இப்படிகளில் நடந்துசென்று இசைக்கலாம்.

Advertisement

ஐரோப்பிய நாடுகளில் இத்தகைய இசைப்படிக்கட்டுகள் ஏற்கெனவே அமைக்கப்பட்டுள்ளன. கேரளாவில் முதன்முறையாக அண்மையில் இவை நிறுவப்பட்டுள்ளன.

ரயில் பயணமே இனிமையானதுதான். அதனை மேலும் இனிமையாக்கியுள்ளது இந்த இசைப் படிக்கட்டுகள்.