தமிழ் சினிமாவில் 80-களில் பிரபல இசையமைப்பாளராக வலம் வந்தவர் சங்கர் கணேஷ். தற்போது வயது முதிர்வால் அவருக்கு வாய்ப்புகள் குறைந்துள்ளதாக கூறுகின்றனர். இந்த நிலையில் திரைப்படங்களில் வாய்ப்பு இல்லாவிட்டாலும் கூட இசை நிகழ்ச்சி உள்பட பிற நிகழ்ச்சிகளில் அவர் தொடர்ந்து பங்கேற்று பாடல் பாடி வருகிறார். இந்த சுழலில், மூச்சு திணறல் ஏற்பட்டு சென்னை வடபழனியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அதாவது ஒரு விழாவில் பாடல் பாடுவதற்காக சென்றுக்கொண்டிருந்தபோது அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதாகவும் உடனடியாக அவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது..
இவர் 1967ம் ஆண்டு ‛மகராசி’ திரைப்படத்தின் மூலமாக இசையமைப்பாளராக தொடங்கினார். எம்ஜிஆரின் ‛ஆட்டுக்கார அலமேலு’ திரைப்படத்தில் அவர் பெயர் பெற்றார். அதன் பின்னரே, 1980, 1990 காலக்கட்டத்தில் கொடிக்கட்டி பறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
