மகாராஷ்டிரா மாநிலம் மும்பை உட்பட பல்வேறு பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இடியுடன் கூடிய மழை காரணமாக மும்பையின் புறநகர் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டது.
மும்பையில் அடுத்த சில மணி நேரங்களுக்கு மிதமான முதல் கனமழை வரை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே கனமழை காரணமாக மும்பையின் ஆச்சார்யா ஆத்ரே சௌக் மெட்ரோ நிலையத்திற்குள் மழை நீர் புகுந்தது. ரெயில்களை விட்டு வெளியே வர அஞ்சிய மக்கள் உள்ளேயே இருந்தனர். இதுதொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.