மும்பையைச் சேர்ந்த 86 வயது மூதாட்டி ஒருவருக்கு, கடந்த வருடம் டிசம்பர் மாதம் 26-ம் தேதி ஒரு தொலைபேசி அழைப்பு வந்துள்ளது. அந்த போன் காலில் தான் ஒரு போலீஸ்காரர் என கூறியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர், அந்த மூதாட்டியின் ஆதார் எண்ணை பயன்படுத்தி தொடங்கப்பட்ட ஒரு வங்கிக் கணக்கிலிருந்து பணமோசடி நடத்துள்ளதாகவும் மூதாட்டி மீது சட்டப்பூர்வமாக நடவடிக்கை மேற்கொள்ள உள்ளதாகவும் மிரட்டியுள்ளார்.
இதையடுத்து வழக்கிலிருந்து விடுவிக்க வேண்டுமென்றால், தாங்கள் சொல்லும் வங்கிக் கணக்குகளுக்கு பணம் அனுப்புமாறு கேட்டுள்ளனர். தொடர்ந்து அந்த மூதாட்டியை மிரட்டி ரூ.20 கோடியே 25 லட்சம் வரை பணத்தை பறித்துள்ளனர்.
ஒரு கட்டத்தில் அது ஒரு மோசடி என்பதை உணர்ந்த மூதாட்டி, காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார். புகாரின் ப்யாரிலாக் விசாரணையில் இறங்கிய காவல் துறையினர், மோசடி பேர்வழிகள் அளித்த வங்கிக் கணக்குகளை வைத்து, அவர்களை தட்டித் தூக்கியுள்ளனர். இந்த வழக்கின் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.