ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் இருந்து மும்பைக்கு ஏர் இந்தியா விமானம் இன்று மதியம் 1.35க்கு புறப்பட்டது. விமானம் புறப்பட்ட 18 நிமிடங்களுக்கு பின்னர், அதில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து விமானம் மீண்டும் ஜெய்ப்பூருக்கு திருப்பிவிடப்பட்டது.
சமீப காலமாக ஏர் இந்தியா விமானத்தில் தொழிநுட்பக்கோளாறு ஏற்பட்டு வருவது தொடர்கதையாகிவிட்டது. இதனால் பயணிகள் மத்தியில் அதிருப்தியும், அச்சமும் ஏற்பட்டுள்ளது.