மும்பையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ரிசர்வ் வஙகியின் கவர்னர் சக்தி காந்த தாஸ், உக்ரைன் போரால் உலகளாவிய அளவில் பணவீக்கம் அதிகரித்து இருப்பதாக தெரிவித்தார்.
இந்திய பொருளாதாரம் நிலையாக இருக்கிறது என்றும் அதன் வளர்ச்சிக்கு ரிசர்வ் வங்கி உறுதுணையாக இருக்கும் எனவும் அவர் கூறினார்.
நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம் நடப்பு நிதியாண்டில் 7.2 சதவிகிதமாக இருக்கும் என்றும் அவர் உறுதியளித்தார்.