இந்தியாவின் ஆகப் பெரும்பணக்காரரான ரிலையன்ஸ் குழுமத்தின் முகேஷ் அம்பானி உலகப் பணக்காரர்கள் பட்டியலில் பின்னடைவைச் சந்தித்துள்ளார்.
ரிலையன்ஸ் நிறுவனத்தின் கடன் அதிகரிப்பு, எரிசக்தி மற்றும் சில்லறை வணிக துறைகளில் மந்தமான வளர்ச்சி ஆகிய காரணமாக முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு குறைந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் உலகின் முதல் 10 பெண்கள் பணக்காரர்களில் ரோஷ்னி நடார் 5வது இடத்தை பிடித்து சாதனை செய்துள்ளார். முதல் பத்து இடங்களுக்குள் வந்த முதல் இந்தியப் பெண் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.
ரோஷ்னி நாடார் மற்றும் அவரது குடும்பம் ₹3.5 லட்சம் கோடி நிகர சொத்து மதிப்புடன் உலகின் 5வது பெண் பணக்காரராக உள்ளார்.