அடேங்கப்பா! கமலுக்கு எதிராக களம் இறங்கும் ஏழு வில்லன்கள்

50
Advertisement

ஷங்கர் இயக்கத்தில் கமல் ஹாசன் நடிக்கும் ‘இந்தியன் 2’ படம் கடந்த ஆண்டே தொடங்கப்பட்ட நிலையில், தற்போது படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

படத்தின் climax மற்றும் சிறப்பு சண்டைக் காட்சிகள் தனுஷ்கொடியில் படமாக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

கமலுடன் சித்தார்த், காஜல் அகர்வால், பிரியா பவானி ஷங்கர் மற்றும் ரகுல் ப்ரீத் சிங் நடிக்கும் இப்படத்தில் ஏழு வில்லன்கள் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

வில்லன் கதாபாத்திரங்களில் சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா, ஜெயப்பிரகாஷ், குரு சோமசுந்தரம், மாரிமுத்து, வெண்ணிலா கிஷோர் மற்றும் சிவாஜி குருவாயூர் ஆகியோர் நடிக்க இருப்பதாக பேசப்பட்டு வருகிறது.

அனிருத் இசையமைக்கும் இப்படத்தில், மறைந்த நகைச்சுவை நடிகர் விவேக் நடித்த காட்சிகள் மாற்றப்படாது என ஷங்கர் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.